விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை பிரிவான டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கை.. சர்வதேச விமானப் பயணிகளின் முதல் வகுப்பு பயணத்தை மாற்றினால் அவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் ஒரு பகுதியை திருப்பி அளிக்கப்படும். அதாவது சர்வதேச விமானப் பயணிகளின் முதல் வகுப்பு பயணத்தை மாற்றினால் அவர்களின் டிக்கெட் கட்டணத்தில் வரிகள் உள்பட 30 முதல் 75 சதவீதம் வரையில் விமான நிறுவனங்கள் திருப்பி அளிக்க வேண்டும். இந்த விதிமுறை பிப். 15ம் தேதிமுதல் அமலுக்கு வரும். 1,500 கி.மீ. குறைவான தொலைவு விமான பயண டிக்கெட்டுக்கு 30 சதவீதமும், 1,500 முதல் 3,500 கி.மீ. தொலைவு பயண டிக்கெட்டுக்கு 50 சதவீதமும், 3,500 கி.மீ.க்கும் மேல் உள்ள பயண டிக்கெட்டுகளுக்கு 75 சதவீதமும் பயணக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும். பயணிகளுக்கு தெரியாமல் பயண வகுப்பு மாற்றம் செய்யப்பட்டால் வரிகள் உள்பட பயணக் கட்டணத்தை முழுமையாக திருப்பி அளிப்பதுடன் அடுத்த வகுப்பில் பயணிகளை இலவசமாக அழைத்துச் செல்ல வேண்டும்’ என்று டிஜிசிஏ முன்பு தெரிவித்திருந்தது.
Tags:விமானப் பயணம்