Skip to content
Home » ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ. 30 லட்சம் அபராதம்…

ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ. 30 லட்சம் அபராதம்…

அமெரிக்காவில் இருந்து இந்தியாவின் மும்பை நகருக்கு வந்த 80 வயது முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து விமான போக்குவரத்து கண்காணிப்பு இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 12ம் தேதியன்று அமெரிக்காவிலிருந்து வயது முதிர்ந்த தம்பதி மும்பை வந்தனர்.

இதற்காக பயணச்சீட்டு முன்பதிவு செய்த போது வீல் சேர் வசதி வேண்டும் எனக் கூறியிருந்தனர். மும்பை வந்ததும், போதுமான வீல் சேர் இல்லாததால் மனைவிக்கு மட்டும் வீல் சேர் ஏற்பாடு செய்யப்பட்டது. கணவரை சிறிது நேரம் காத்திருக்கும்படி ஊழியர்கள் அறிவுறுத்தினர். ஆனால், மனைவியை தனியாக அனுப்ப விரும்பாத கணவர், நடந்தே சென்றார். சுமார் 1.5 கிலோ மீட்டர் நடந்து சென்ற அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக விமான போக்குவரத்து கண்காணிப்பு இயக்குநரகம் (DGCA) விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து DGCA பிறப்பித்த உத்தரவில், ‛‛ உதவி தேவைப்படுகிறவர்களுக்கு வீல் சேர் சேவையை ஏற்படுத்தி தருவது விமான நிறுவனங்களின் கடமையாகும். உயிரிழப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊழியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காதவாறு இருக்க செய்யப்பட்ட ஏற்பாடுகள் பற்றிய அறிக்கையை விமான நிறுவனம் அளிக்கவில்லை. எனவே ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!