புதுக்கோட்டையில் இன்று எய்ட்ஸ் விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது. மாநகராட்சி பூங்கா அருகில் இருந்து மனித சங்கிலி தொடங்கியது. இதில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் கலெக்டர் மு. அருணா,மருத்துவத்துறை இணை இயக்குனர் டாக்டர் ஸ்ரீபிரியா தேன்மொழி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர் ராம்கணேஷ் உள்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
