Skip to content
Home » அதிமுக அவைத்தலைவர் திருச்சி மருத்துவமனையில் அனுமதி…

அதிமுக அவைத்தலைவர் திருச்சி மருத்துவமனையில் அனுமதி…

  • by Authour

அதிமுக அவை தலைவராக இருப்பவர் தமிழ் மகன் உசேன் ( 85). இவர் நேற்று முன் தினம் சென்னையில் இருந்து ரெயில் மூலம் திருச்சி வந்தார். திருச்சியில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த நிலையில் அவருக்கு ஜங்ஷன் ரெயில்வே நிலையத்தில் காய்ச்சல் மற்றும் குளிர் அதிகமாக இருந்த காரணத்தில் திருச்சி – சென்னை பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காய்ச்சல் தொடர்பாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. உடல் நலக்குறைவு காரணமாக திருச்சியில் சிகிச்சை பெற்றுவரும் அவைத்தலைவர்  தமிழ்மகன் உசேனை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார்  சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்…

மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனை ,  மாவட்ட செயலாளர்கள்  சீனிவாசன், பரஞ்சோதி,  அமைப்பு செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, சிவபதி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மருத்துவமனைக்கு சென்று அவரை பார்த்து நலம் விசாரித்தனர். இன்னம் 2, 3 நாட்களில் தமிழ்மகன் உசேன் நலம் பெற்று வீடு திரும்புவார் என்று தெரிய வருகிறது.