Skip to content

பியூட்டி பார்லர் பெண்ணிடம் அத்துமீறல்-அதிமுக பிரமுகர் கைது…

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் மேலபாதி சிவன் கோவில் தெருவை சேர்ந்த ஹரிதா (23) என்றவர் அழகு நிலையம் நடத்தி வருகிறார். மேலப்பாதி அப்பு என்கின்ற தினகரன் (28) நண்பரின் குழந்தை பிறந்தநாளுக்கு மேக்கப் போட அழைத்துச்சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தினகரன் கைது பாலியல்பலாத்காரத்திற்கு ஒத்துழைக்காத பியூட்டி பார்லர் பெண்ணை அரிவாளை காட்டி மிரட்டிய அதிமுக பிரமுகர் கைது சிறையில் அடைப்பு

மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பஅணி து.தலைவர் மேலையூரை சேர்ந்த அப்பு என்கிற தினகரன்(28) இருசக்கர வாகனத்தில் மேலையூயர் பியூட்டி பார்லர் சென்று தனதுநண்பரின் குழந்தை பிறந்தநாளுக்கு மேக்கப் போட வேண்டும் என கூறி ஹரிதா (23) என்ற பெண்ணை செம்பனார்கோவில் ரயிலடி தெருவிலுள்ள யாரும் இல்லாத வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்து அத்துமீறியுள்ளள்ளார் .அப்பெண் ஒத்துக் கொள்ளவில்லை என்பதால் அரிவாளைக் காட்டி மிரட்டி அத்துமீறி தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். உடனே அவரிடம் இருந்து விடுபட்ட ஹரிதா கூச்சலிட்டு அங்கிருந்து தப்பி ஓடி செம்பனார் கோயில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் கருணாகரன் விசாரணை மேற்கொண்டு பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்தல், ஆயுதத்தை காட்டி கொலைமிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிவு செய்து அதிமுக நிர்வாகி அப்பு என்கிற தினகரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகப்பட்டினம் சிறையில் அடைத்தனர்

error: Content is protected !!