புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள், தொட்டியத்தில் நடந்த விளையாட்டு போட்டிக்கு சென்றபோது அங்கு காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அந்த பள்ளிக்கு 2 தினங்கள் விடுமுறை விடப்பட்டது. மீண்டும் இன்று பள்ளி திறக்கப்பட்டது. மாவட்ட கல்வி அதிகாரி மணிவண்ணன் பிலிப்பட்டி வந்து அந்த ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து குழந்தைகள் பள்ளிக்கு வந்தனர். அப்போது சிலர் பள்ளியை திறக்க கூடாது என ஆசிரியர்களை கண்டித்து பேசினர். அப்போது உதவி தலைமை ஆசிரியை பரிமளா, இறந்து போன மாணவி தமிழரசியயயன் தந்தை காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அதைத்தொடர்ந்து ஊர் மக்கள் அனைவரையும் சமாதானம் செய்தனர். பின்னர் வகுப்புகள் தொடங்கி நடந்து வருகிறது.