அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த 9ம் தேதி தொடங்கிய 4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் மொகமது சிராஜூக்கு பதிலாக மொகமது ஷமி இடம் பெற்றார். ஆஸ்திரேலிய அணி 480 ரன்கள் குவித்து 2ம் நாள் ஆட்டமிழந்தது. இதில் கவாஜா 180 ரன்கள் குவித்தார். இந்திய வீரர் அஸ்வின் 6 விக்கெட்டுகள் சாய்த்தார்.
அதைத்தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்தியா நேற்று மாலை 571 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதில் விராட்கோலி186 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கோலி நேற்று தனது 75வது சதத்தை அடித்தார். இது அவரது டெஸ்ட் வரலாற்றில்28வது சதமாகும். 1,205 நாட்களுக்கு பின்னர் அவர் தனது டெஸ்ட் சதத்தை மீண்டும் அடைந்தார்.
அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா தனது 2ம் இன்னிங்சை தொடங்கியது. ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 6 ஓவர்களில் 3 ரன் மட்டும் எடுத்தது. அத்துடன் ஆட்டம் நேற்று முடிவுக்கு வந்தது. இன்று கடைசிநாள் போட்டி காலையில் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள்குன்னமென், ஹெட் ஆகியோர் தொடர்ந்து ஆடினர்.
மதிய உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியாஒரு விக்கெட்(குன்னமென்6) இழப்புக்கு 73 ரன்கள் எடுத்திருந்தது. எல்பிடபுள்யு முறையில் இவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது. ரிவியூ செய்ததில் அவருக்கு கொடுத்த அவுட் தவறானது என தெரியவந்தது. மதியம் 12.45 வரை ஆஸ்திரேலியா 44.4 ஓவரில் 99 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து மதியம் 3.20 வரை ஆட்டம் நடந்தது. 78.1 ஓவர் வீசி இருந்த நிலையில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்திருந்தது. லவுசேன்(63), ஸ்மித்(10) ஆகியோர் ஆடிக்கொண்டிருந்தனர். இதற்கு மேல் என்ன விளையாடினாலும் அது டிராவாகத்தான் இருக்கும் என்பதால் போட்டியை அத்துடன் முடித்துக்கொள்ள இரு அணி கேப்டன்களும் முடிவு செய்த நிலையில் ஆட்டம் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.
இரண்டாவதாக ஹெட்(90) ரன்னில் அவுட் ஆனார் அவரது விக்கெட்டை அக்சர்பட்டேல் எடுத்தார். முதல் விக்கெட் அஸ்வினுக்கு கிடைத்தது. ஏற்கனவே முதல் 2 டெஸ்ட்களில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. 3வது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தது. 4வது டெஸ்ட் டிரா ஆனது. எனவே 4 டெஸ்ட்கள் கொண்ட இந்த தொடரை இந்தியா2-1 என்ற நிலையில் கைப்பற்றியது. இதன் மூலம் தொடர்ச்சியாக 4வது முறையாக பார்டர்- கவாஸ்கர் கோப்பையை இந்தியா கைப்ற்றி உள்ளது. ஆட்ட நாயகனாக இந்திய வீரர் கோலி அறிவிக்கப்பட்டார்.