Skip to content

ஆமதாபாத் 3வது ஒன்டே: சதம் விளாசினார் சுப்மன் கில்

  • by Authour

இந்தியா வந்துள்ள  இங்கிலாந்து  கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் ஆடி வருகிறது. ஏற்கனவே நடந்த 2 போட்டிகளிலும் இந்தியா வென்று உள்ளது.  கடைசி ஒருநாள் போட்டி இன்று  குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில்  பகல் இரவு போட்டியாக தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து, இந்திய அணியை பேட்டிங் செய்யும்படி கேட்டுக்கொண்டது. அதன்படி இந்திய கேப்டன் ரோகித்,   சுப்மன் கில் ஆகியோர்   களம் இறங்கினர்.  ரோகித் 1 ரன்னில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவருக்கு பதில்,  கோலி வந்தார். அவர்  52 ரன்னில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.   இரண்டரை மாதத்திற்கு  பின்னர் கோலி  அரை சதம் கடந்ததால் மைதானத்தில் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். சிறிது நேரத்தில் அவர் அவுட் ஆகி விட்டார்.

23 ஓவா் முடிவில் இந்திய அணி 147 ரன்னுக்கு 2 விக்கெட்  இழந்திருந்தது.  கில் 78 ரன்னிலும், ஸ்ரேயஸ் அய்யர் 8 ரன்னிலும் ஆடிக்கொண்டு இருந்தனர்.25 வது ஓவர் முடிவில் கில் 85 ,  ஸ்ரேயஸ் 15 ரன்களுடன் ஆடிக்கொண்டு இருந்தனர். அப்போது இந்தியாவின் ஸ்கோர் ந விக்கெட்டுக்கு 161 ரன்.

31.2 ஓவரில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை குவித்தது.  அப்போது  கில் 95 பந்துகளில் 102 ரன்கள் எடுத்திருந்தார். அய்யர் 43 ரன்கள் எடுத்திருந்தார்.

உறுப்பு தானத்தை வலியுறுத்தி இந்திய வீரர்கள் கையில் பச்சை  பட்டை அணிந்து விளையாடுகிறார்கள்.

 

 

error: Content is protected !!