Skip to content
Home » ஆமதாபாத் ஸ்டேடியத்தில் இருநாட்டு பிரதமர்கள்….கேப்டன்களுடன் கைகோர்த்து ஆரவாரம்..

ஆமதாபாத் ஸ்டேடியத்தில் இருநாட்டு பிரதமர்கள்….கேப்டன்களுடன் கைகோர்த்து ஆரவாரம்..

  • by Authour

 

இந்தியாவுக்கு  வந்துள்ள  ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நாக்பூரில் நடந்த முதலாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்திலும், டில்லியில் நடந்த 2 வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

3 வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 4 வது மற்றும் கடைசி போட்டி ஆமாதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று  காலை தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டிக்காவே டாஸ் போட  இந்தியா-ஆஸ்திரேலியா நட்புறவை குறிக்கும் வகையில் புதிய நாணயம் தயாரிக்கப்பட்டு அந்த நாணயம் டாஸ்  போடப்பட்டது.

இந்தியாவுக்கு 4 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனிஸ், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து கடைசி டெஸ்ட் போட்டியை பார்த்து ரசிக்கிறார்.  இதற்காக இன்று காலை 2 பிரதமர்களும் ஸ்ேடியம் வந்தனர். இரு நாட்டுக்குமான 75 ஆண்டு கால நட்புறவை குறிக்கும் வகையில் இரு பிரதமர்களும் சேர்ந்து ஸ்டேடியத்துக்கு வந்து போட்டியை கண்டுகளித்தனர். போட்டி தொடங்குவதற்கு முன் இரு நாட்டு பிரதமர்களும் மைதானத்தின் நடுவே, இருநாட்டு அணி கேப்டன்களுடன் கைகோர்த்து கைகளை உயர்த்தினர். அப்போது அங்க திரண்டிருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இந்த போட்டியை இந்திய அணி வெல்லும் பட்சத்தில் தொடரை கைப்பற்றுவதுடன், ஜூன் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய-ஆஸ்திரேலிய பிரதமர்களின் வருகையால் மைதானத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடக்க ஆட்டக்காரர்களாக  ஹெட், கவாஜா ஆகியோர் இறங்கினர். 5.5ஓவரில் 23 ரன்கள் சேர்த்திருந்தனர். 9 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *