பிரதமர் மோடி, விவசாயிகளை கன்னியாகுமரி சென்று தியானம் செய்ய விடாமல் தடுத்ததாலும், லாபகரமான விலை கொடுக்காமல். நதிகளை இணைக்காமல், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றி வருதாகவும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பிரதமர் திருச்சி வருவதையொட்டி ஏர்போர்ட் உள்ளே நுழைந்து விமான மறியல் செய்ய போவதாக நேற்று அறிவித்தனர். இதனால் போலீசார் விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகளை மலர் சாலையில் உள்ள சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் வீட்டு காவலில் வைத்தனர்.