2024 – 2025ம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை மாணவர்கள் சேர்க்கை நுழைவுத் தேர்வு கடந்த ஜூன் 23ம் தேதி நடந்தது. இந்த தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவை வேளாண் பல்கலை. துணைவேந்தர் கீதா லட்சுமி தெரிவித்துள்ளார்.தேர்வர்களுக்கு இ-மெயில் மூலம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு ரத்து குறித்து துணைவேந்தர் கீதா லட்சுமி கூறியதாவது: தொழில் நுட்பக்கோளாறு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் திருப்பி தரப்படும். மறுதேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
வேளாண் பல்கலை முதுநிலை நுழைவுத்தேர்வு திடீர் ரத்து ஏன்? துணைவேந்தர் விளக்கம்
- by Authour
