தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை மூலம் பயிர் சாகுபடி குறித்த மின்னணு அளவீடு (டிஜிட்டல் கிராப் சர்வே) பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் வேளாண் கல்லூரி மாணவர்கள் இப்பணியை மேற்கொண்டு வருகிறார்கள் . திருச்சி மாவட்டத்தில்கடந்த ஒரு வாரமாக பயிர் சாகுபடி குறித்த மிண்ணனு அளவீடு பணி நடைபெற்று வருகிறது.
வேளாண்மை துறை இயக்குனர் முருகேஷ் இப்பணியை இன்று (13.11.24). திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த பனைய குறிச்சி கிராமத்தில் ஆய்வு செய்தார். பனையகுறிச்சி கிராமத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடினார்..பதிவேற்றம் செய்வது குறித்து துறை அலுவலர்களை ஆய்வு செய்தார். ஆய்வின் பொழுது மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் அளிக்கப்படுவதை உறுதி செய்தார். இந்த கணக்கீட்டு பணியை மேலும் சிறப்பாக மேற்கொள்ள அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குனர் கண்ணன், துணை இயக்குனர்கள், வேளாண்மை உதவி இயக்குநர் தரக்கட்டுப்பாடு, திருவெறும்பூர் வட்டார அலுவலர்கள் மற்றும் குமுளூர் வேளாண் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் உடன் இருந்தனர்