தமிழக சட்டமன்றத்தில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று வேளாண்துறை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலின்போது அவர் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்ற திருக்குறளை கூறி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
கடந்த ஆண்டு 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பெருமழையினால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு விரைவில் 208.20 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும். பயிர் இழப்பீடு தொகையாக 25 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.4,436 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
பயிற்சி பெற்ற பண்ணைமகளிர் சுய உதவிக்குழுக்கள் தென்னை நாற்றுப்பண்ணைகள் அமைத்திட 2.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்,தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்குவதற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் –
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின்கீழ், களர் அமில நிலங்களை சீர்படுத்த ரூ.22.5 கோடி ஒதி ஒதுக்கீடு செய்யப்படும். பசுந்தாள் உரம் பயிரிட ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதன்மூலம் 2 லட்சம் விவசாயிகள் பயனடைவர்.
10 ஆயிரம் விவசாயிகளுக்கு தலா 2 மண்புழு உரப்படுக்கை வழங்கிட ரூ.6 கோடி மானியம் வழங்கப்படும். நிரந்தர மண்புழு உரத்தொட்டி, உரப்படுக்கை அமைக்க ரூ.5 கோடி மானியம் வழங்கப்படும்.
சிறுதானிய இயக்கத்திற்கு 65.3 கோடி ஒதுக்கப்படும். மானிய விலையில் விதைகள் வழங்க 35 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டு கடனுக்கான வட்டி மானியத்துடன் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
உணவு பாதுகாப்பினை உறுதி செய்யும் உணவு மானியத்திற்கு 10 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
* மொத்த சாகுபடி 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.
* 2 ஆண்டுகளில் 1லட்சத்து 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது; நடப்பாண்டில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும்.
* 2 லட்சம் விவசாயிகள் பயனடைய, 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் தயாரிக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு
* சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும் என அறிவிப்பு
* அரசு தோட்டக்கலை பண்ணைகளில் நடவுச் செடிகள் விற்பனை மையம் அமைக்கப்படும்.
* 2,482 கிராம ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு ரூ. 6.27 கோடி நிதி ஒதுக்கீடு
* ஆடாதொடா, நொச்சி போன்ற தாவர வகைகளை தரிசு நிலங்களிலும் வயல் பரப்புகளிலும் நடவு செய்திட ரூ.1 கோடி ஒதுக்கீடு
* வட்டாரத்திற்கு ஒரு கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு உயிர்ம வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணை உருவாக்க ரூ. 38 லட்சம் ஒதுக்கீடு
* 14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைக்க ரூ.42 கோடி ஒதுக்கீடு
* கிராமங்களில் மறுமலர்ச்சி ஏற்படுத்திட ஒரு கிராமம், ஒரு பயிர் என்ற திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்
* கன்னியாகுமரியில் பரிசோதனை, பதப்படுத்தும் கூடங்கள் அமைத்து, தேனீ வளர்ப்புப் பயிற்சிகள் அளித்திட ரூ. 3.60 கோடி நிதி
* நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சீவன் சம்பா போன்ற மருத்துவ குணம் கொண்ட நெல் ரகங்கள் பயிரிட விதை விநியோகம் செய்யப்படும்.
* இயற்கை விவசாயத்திற்கு இடுபொருள் தயாரித்தல் அமைக்க 100 குழுக்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும்.
* வேளண் பரப்பை அதிகரித்து, உற்பத்தியை பெருக்க ரூ.108 கோடி நிதி ஒதுக்கீடு
* 1,500 ஏக்கரில் வீரிய ஒட்டு ரக ஆமண சாகுபடி செய்ய ரூ.18 லட்சம் ஒதுக்கீடு
* பயிர் உற்பத்தித்திறன் உயர்த்துதல் ஊக்குவிப்புத் திட்டத்துக்கு ரூ. 48 கோடி நிதி ஒதுக்கீடு
* ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்திற்கு ரூ.65.3 கோடி நிதி
* துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கம் செயல்படுத்த ரூ.17.50 கோடி நிதி ஒதுக்கீடு
* வேளாண் காடுகள் திட்டத்தின்கீழ் 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் வழங்கப்படும்
* சூரிய காந்தி பயிரிடும் பரப்பை அதிகரிக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு: 12.500 ஏக்கர் பரப்பளவில் சூரிய காந்தி சாகுபடி பரப்பு விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்படும்.
* உழவர் சந்தையை போன்று தரமான வேளாண் பொருட்களை நகர்ப்புறங்களில் விற்பனை செய்ய ரூ.5 கோடியில் 100 உழவர் அங்காடிகள் அமைக்கப்படும்.
* கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு
* முக்கிய பயிர் வகைகள், எண்ணெய் வித்துக்கள் பரப்பை விரிவாக்கம் செய்ய ரூ..108 கோடி
* 15,810 மெட்ரிக் டன் பயிர் வகைகள், எண்ணெய் வித்துக்கள் 50-60% மானியத்துடன் வழங்கப்படும்.
தொடர்ந்து அமைச்சர் பட்ஜெட் உரை படித்து வருகிறார்.