திமுக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.2026 தேர்தலில் திமுக கூட்டணி 200க்கு மேல் இடங்களை பிடிக்க வேண்டும் என்பதே நமது இலக்கு என ஒவ்வொரு நிர்வாகிகள் கூட்டத்திலும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூறி வருகிறார். இந்த நிலையில் திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதி எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியன் தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவு பலருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. சவுந்தரபாண்டியனின் பதிவு.. ’மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் , அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்களின் கோரிக்கையை கேட்டு அறிந்து நிறைவேற்றி தாருங்கள் என்று கட்டளை இட்டு இருக்கிறார்கள்.
ஆனால் திருச்சியில் முக்கியமானவரின் ஏஜெண்டாக செயல்படும் எடப்பாடியின் உறவினரான மூர்த்தியை மதிப்பதில் ஒரு துளி கூட திமுக காரர்களை அரசு அலுவலர்கள் மதிப்பதில்லை.
இப்படி இருக்கையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தொண்டர்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தாருங்கள் என்பதை எப்படி தொண்டர்களுக்கு நிறைவேற்றித் தருவது என்று தெரியவில்லை’, என குறிப்பிட்டுள்ளார் சௌந்தரபாண்டியன் எம்.எல்.ஏ. எம்எல்ஏ தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ள மூர்த்தி யார்? என பலரும் கேள்வி எழுப்பியுள்ளார். எம்எல்ஏ குறிப்பிட்ட மூர்த்தி என்பவர் எஸ்எம்டி மூர்த்தி என அழைக்கப்படும் காண்டிராக்டர் என்றும் அவர் தான் தற்போது திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை பணிகளை பிரித்து கொடுக்கும் பணியினை மேற்கொண்டு வரும் நபர் என்றும் விபரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் தனது பேஸ்புக்கில் அரசு விழாக்களில் அழைப்பு இல்லை என்பது உள்பட பல விவகாரங்கள் குறித்து பதிவிட்டு ஏற்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.