கோவை, கருமத்தம்பட்டியை அடுத்து தெக்கலூர் அருகே தனியார் நிறுவனம் விளம்பர பலகை அமைக்கும் போது பேனர் விழுந்து 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் குணசேகரன்(52) குமார் (40), சேகர்(45.) சேலம் ஜலகண்டா புரத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் கோவை கருமத்தம்பட்டி பகுதியில் அடுத்து தெக்கலூர் அருகே தனியார் நிறுவனத்தின் விளம்பர பலகை அமைக்கும்போது இக்கோர சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இரும்பு ஆங்கில்கள் சரிந்து விழுந்ததில் 3 பேரும் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்துவந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.