Skip to content

ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சஸ்பெண்ட் உத்தரவு ரத்து.. etamilnews.com சார்பில் முதல்வருக்கு நன்றி..

வீரப்பன் தேடுதலில் இடம்பெற்றவரும், திருச்சியைச் சேர்ந்த கோசிஜன், பிச்சைமுத்து,  சென்னைஅயோத்தி குப்பம் வீரமணி ஆகியோர் என்கவுண்டர்களில் பங்கேற்றவருமான ஏடிஎஸ்பி வெள்ளத்துரை இன்று ஓய்வு பெற இருந்த நிலையில் நேற்றிரவு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  தற்போது திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பி ஆக இருந்த ஏடிஎஸ்பி வெள்ளத்துரையிடம் நேற்றிரவு சஸ்பெண்ட் உத்தரவு வழங்கப்பட்டது. கடந்த 2013 ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் கொக்கி குமார் என்பவர் லாக்கப் மரண புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தநிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக தமிழக உள்துறை செயலாளர் அமுதா சஸ்பெண்ட் உத்தரவை வழங்கியிருந்தார். இந்த சஸ்பெண்ட் உத்தரவு தொடர்பாக நமது etamilnews YOUTUBE சேனலில் https://youtu.be/I7qqY7L6uY4?si=sey7IwHPIm6dvmgv என்கிற தலைப்பில்  மாலை 5.16 மணிக்கு வீடியோ வெளியிடப்பட்டது.  இந்த நிலையில் இன்று இரவு சுமார் 8 மணியளவில் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை இன்று பணி ஓய்வு பெறும் நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை செயலாளராக உள்ள அமுதா அறிவித்த சஸ்பெண்ட் உத்தரவு தன்னிச்சையாக எடுத்த முடிவு என புகார் எழுந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு உள்துறை செயலாளர் அமுதாவை கண்டித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சஸ்பெண்ட் விவகாரத்தில் உடனடியாக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுத்தற்கு etamilnews சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!