தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இதற்காக இன்று காலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்துக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். உதயகுமார், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். கள்ளக்குறிச்சி கள்ள சாராய சாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த கருப்பு சட்டை போராட்டத்தை அவர்கள் கையில் எடுத்திருப்பதாக கூறப்பட்டது.
