புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் கடைவீதியில் அ.தி.மு.க சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவருமான பி.கே. வைரமுத்து தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு நீர்மோர், சர்பத், தர் பூசணி, பலா, வாழை உள்ளிட்ட பழங்களை வழங்கினார். விழாவில் அரிமளம் வடக்கு ஒன்றியசெயலாளர் கடையக்குடி திலகர், முக்கிய நிர்வாகிகள் காசி கண்ணப்பன், மணிகண்டன் , சிவகுமார், அடைக்கலம் காத்தார், குழிபிறை பாண்டி, நமண சமுத்திரம் கிளைக் கழகச் செயலாளர் அருணாச்சலம், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் சஞ்சய் காந்தி, குழந்தைவேலு, அருணாசலம், நடராஜன், பெரியசாமி, சித்ரா, இந்திரா, ராஜம்பாள் மற்றும் திரளான அதிமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.