Skip to content

சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பு ஏன்?

தமிழக சட்டமன்றத்தில் இன்று ஆன் லைன் ரம்மி தடை மசோதா மீண்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா மீது அனைத்து கட்சி தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து பேசினா். அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் பேசினார். அதன் பிறகு ஓ.பன்னீர்செல்வமும் பேசினார்.

அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி எழுந்து, ஒரு கட்சிக்கு ஒருவர் வீதம் பேச அனுமதி அளித்தீர்கள். அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் பேசியபின் ஓபிஎஸ்சுக்கு எப்படி அனுமதி வழங்கலாம் என கேட்டார்.

அதற்கு சபாநாயகர், முன்னாள் முதல்வர் என்ற முறையில் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. இதற்கு வேறு காரணம் கற்பிக்க வேண்டாம் என்றார். இதை ஏற்காத அதிமுகவினர் கூச்சல் போட்டனர். அப்போது ஓபிஎஸ் பேசியதை ஆதரித்து மனோஜ்பாண்டியன் சத்தமாக ஏதோ கூற, அதற்கு எடப்பாடி தரப்பை சேர்ந்த கோவிந்தசாமி  எதிர்வாதம் செய்தார். பின்னர் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!