திருச்சி மாவட்டம், முசிறியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரின்ஸ் எம்.தங்கவேல் திருவுருவ படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உடன் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் தங்கவேலின் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி :-
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். சென்னை, தூத்துக்குடி கனமழை குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கப்படாததால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் பல உயிர்கள் பாதுகாக்கப்பட்டு இருக்கும். முன்னெச்சரிக்கை விடுக்கப்படாததால் மனித உயிர்கள், கால்நடைகளை இழந்துள்ளோம்.
அதிமுக செய்திகளை ஊடகங்கள் புறக்கணிக்கின்றன. தமிழக மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அதனை கருத்தில் கொள்ளாமல் திமுக சார்பில் இந்தியா கூட்டணியில் பங்கேற்பதற்காக டெல்லி சென்று விட்டார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஏற்கனவே ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அதில் எந்த பயனும் ஏற்படவில்லை. ஏற்கனவே அதிமுக ஆட்சி காலத்தில் உலக முதலீட்டாளாக மாநாடு நடைபெற்றது. அதன் மூலம் முதலீட்டாளர்கள் முதலீடு ஈர்க்கப்பட்டது. தற்போது மாநாடு நடைபெற உள்ளது இந்த மாநாட்டினால் எந்த பயனும் இருக்காது. திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தில் குறிப்பிடத்தக்க அளவில் ஒன்றும் நடைபெற வில்லை.