சட்டமன்றத்தில் அதிமுகவினர் தொடர்ந்து 3 நாட்களாக அமளியில் ஈடுபட்டனர். இன்றும் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி, எங்களை பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை அவர் நடுநிலையாக செயல்படவில்லை என்றார். அதிமுக நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் அதிமுகவினருக்கு வீண் விளம்பரம் தேடுவதில் தான் அக்கறை உள்ளது. அரசு அக்கறையுடன் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
இதைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, இந்த கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.