தமிழக சட்டமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து உசிலம்பட்டி போலீஸ்காரர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்து உள்ளேன். அது குறித்து விவாதிக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, இது நேரமில்லா நேரம். இதில் விவாதிக்க முடியாது. இன்று காலை தான் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டு உள்ளது என்றார்.
இதை ஏற்காத அதிமுகவினர் கூச்சல் போட்டு அமளில் ஈடுபட்டனர். அப்போது எதிர்க்கட்சியினர் சபாநாயகரை நோக்கி கையை நீட்டி பேசினர். இதனை அப்பாவு கண்டித்தார். ஆனாலும் அமளி அடங்கவில்லை.
இதனால் அதிமுகவினரை வெளியேற்றும்படி சபாநாயகர் அவைக்காவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்துஅவர்கள் வெளியேற்றப்பட்டனர். அத்துடன் இன்று ஒருநாள் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட் செய்தும் சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். வெளியே வந்த எடப்பாடி பேட்டி அளித்தார். அதி
இதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் எழுந்து விளக்கம் அளித்தார்.