அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 9ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலை திடீரென மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி ஒப்புதலுடன், அதிமுக தலைமைக்கழகம் சார்பில் அறிவிப்பு வெளியானது.
திடீரென மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து அதிமுகவினர் ஆலோசிக்கத் தொடங்கினர். ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் தங்களுக்கு வேண்டியவர்களிடம் இதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்த நிலையில் மதியம் 1.40 மணி அளவில் அதிமுக அவசர செயற்குழு கூட்டம் வரும் 16ம் தேதி சென்னையில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெறும் என எடப்பாடி அறிவித்து உள்ளார்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணமே தெரியாத நிலையில் மீண்டும் அவசர செயற்குழு கூடுகிறது என்ற அறிவிப்பும் அதிமுகவினர் மத்தியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
