திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் சத்யா பார்த்திபன். இவர் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் . தற்போது அதிமுக வார்டு செயலாளராக இருக்கிறார். இவரது மகன் ஜெயநாராயணன்(39) , இவரது மனைவி நந்தினி, இவர்களுக்கு 2 மகள்கள்.
ஜெயநாராயணன் ஈரோட்டில் எலக்ட்ரிஷியன் வேலை பார்த்து வந்தார். சில தினங்களுக்கு முன் ஜெயநாராயணன் மன்னார்குடிக்கு வந்தார். நேற்று இரவு அப்பகுதியில் டிபன் கடைக்கு சென்று இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது மன்னார்குடி நெடுவாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பீர் முகமது(30), நம்பிராஜன்(30) ஆகியோரும் போதையில் அங்கு டிபன் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். சாப்பிடும்போது பேசிக்கொண்டிருந்த இவர்கள் , திடீரென பீர்முகமது, ஜெயநாராயணனை மரியாதை குறைவாக போடா, வாடா என்ற பேசினாராம்.
இதனால் ஆத்திரமடைந்த ஜெய நாராயணன், பீர்முகம்மதை தாக்கினார். பீர்முகமதுவுக்கு ஆதரவாக நம்பிராஜனும் சண்டை போட்டார். இதனால் ஜெயநாராயணன் ஒரு பக்கமும், மற்றவர்கள் ஒருபக்கமுமாக தகராறு செய்து மோதல் முற்றியது. அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து டிபன் கடையில் இருந்து அனுப்பி விட்டனர்.
ரோட்டில் நடந்து சென்ற ஜெயநாராயணனை பீர்முகமதுவும், நம்பிராஜனும் சேர்ந்து செங்கல் மற்றும் கட்டையால் ஜெய நாராயணன் தலையில் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த ஜெய நாராயணன் மயங்கி கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்குகொண்டு சென்றனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜெய நாராயணன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து பீர்முகமது, நம்பிராஜன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அதிமுக பிரமுகரின் மகன் கொல்லப்பட்ட சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.