தி.மு.க. அரசின் 18 மாத கால ஆட்சியில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை போன்றவற்றை கண்டித்து அ.தி.மு.க. சார்பில், கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 9-ந் தேதி அன்று பேரூராட்சிகளிலும், நாளை (13-ம் தேதி) நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், வரும் 14-ம் தேதி ஒன்றியங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக தலைமை ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால் மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 9-ம் தேதி நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, வரும் 16-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தி நிலையில் நாளை நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 21-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.