நாகை அக்கரைப்பேட்டை சாலையில் நாகை ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில்வே கதவால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அவதிபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ரயில்வே இடத்தில் மட்டும் மேம்பாலம் அமைக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நெடுஞ்சாலைத்துறை சார்பாக 101 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள நாகை – அக்கரைப்பேட்டை – வேளாங்கண்ணி ரயில்வே
மேம்பாலத்தின் கட்டுமான பணியை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன்தொடங்கி வைத்தார். 1312 மீட்டர் நீளத்தில் பிரமாண்டமாக அமையவுள்ள ரயில்வே மேம்பால கட்டுமான பணிகளை பொதுமக்கள் பாதிக்காத வகையில் இரண்டு ஆண்டுகளுக்குள் விரைந்து முடிக்க நாகை மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அக்கரைப்பேட்டை ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதியை சந்தித்து வந்த நிலையில் மேம்பாலம் கட்டப்படுவதால் வேளாங்கண்ணிக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.