Skip to content
Home » அதிமுக பொதுக்குழு வழக்கு ஜன.,4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு….

அதிமுக பொதுக்குழு வழக்கு ஜன.,4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு….

  • by Authour

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கல் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இன்றும் இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. இதன்படி விசாரணைக்கு வந்த போது, நேரமின்மை காரணமாக வழக்கை நாளைக்கு தள்ளிவைக்கலாமா என்று நீதிபதிகள் கேட்டனர். அப்போது, ஈ.பி.எஸ் தரப்பில், நாளைக்கு வேண்டாம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் தள்ளிவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு காலவதியாகிவிட்டது என்ற ஒரு வாதமும் முன்வைக்கப்பட்டது. இதனை பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையை ஜனவரி 4-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு தள்ளிவைக்கிறோம். இதற்குள் எழுத்துப்பூர்வமான அனைத்து வாதங்களையும் தாக்கல் செய்வதை உறுதி செய்யுமாறு இருதரப்பிற்கும் நீதிபதிகள் அறிவுறுத்தி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

1770

770

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *