Skip to content
Home » சிறுமி பலாத்கார வழக்கில் கைது: சென்னை அதிமுக பிரமுகர் நீக்கம், எடப்பாடி அதிரடி

சிறுமி பலாத்கார வழக்கில் கைது: சென்னை அதிமுக பிரமுகர் நீக்கம், எடப்பாடி அதிரடி

  • by Authour

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில்,  அந்த பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் சுதாகர் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து  சுதாகர், அதிமுக அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதால்  சுதாகர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி அறிவித்துள்ளார்.