சேலம் கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி செயலாளர் சண்முகம்(62), இவர் 2 முறை மாநகராட்சி கவுன்சிலராகவும், மண்டல தலைவராகவும் பணியாற்றி உள்ளார். தற்போது ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.
நேற்று இரவு 10 மணி அளவில் இவர் டூவீலரில் தாதகாப்பட்டியில் உள்ள தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த தெருவில் மின்தடை ஏற்பட்டிருந்தது. இருட்டுபகுதியில் அவர் வந்தபோது திடீரென பைக்குகளில் வந்தவர்கள் சண்முகத்தை வழி்மறித்து சரமாரியாக வெட்டித்தள்ளினர். இதில் சண்முகம் அந்த இடத்தி்லேயே இறந்தார்.
உடனடியாக கொலையாளிகள் தப்பி ஓடிவிட்டனர். சண்முகத்தின் வீட்டில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்தது. இதனால் குடும்பத்தனர், உறவினர்கள், கட்சியினர் திரண்டு வந்து மறியல் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் 4 மணி நேரத்திற்கு பின்னரே சடலத்தை போலீசார் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பேரை தேடி வருகிறார்கள்.
ரியல்எஸ்டேட் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கிறார்கள். கொலையாளிகள் திட்டமிட்டு மின்சாரத்தை தடை செய்து இந்த கொலையை அரங்கேற்றிய சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.