அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் ஓபிஎஸ், தான் இன்னும் அதிமுக ஒருங்கிணைப்பாளராக நீடிப்பதாக கூறி வருகிறார். நேற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தையும் கூட்டினார்.
இந்த நிலையில் இன்று எடப்பாடி தலைமையிலான அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நீங்கள் எப்படி அதிமுக கட்சியின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்தலாம் அதற்கு விளக்கம் அளியுங்கள் என கேட்கப்பட்டு உள்ளது.