சிவகாசியில் முன்னாள் அதிமுக எம்பி டி.ராதாகிருஷ்ணன் (67) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். ராதாகிருஷ்ணன் கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுகவில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பல்வேறு பதவிகள் வகித்த ராதாகிருஷ்ணன் தற்போது விருதுநகர் மேற்கு மாவட்ட துணை செயலாளராக உள்ளார். அவருக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருந்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.