கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து கேள்வி நேரத்தை ரத்து செய்து விவாதிக்க வேண்டும் என அதிமுக 3 நாட்களாக கருப்பு சட்டையுடன் சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்டது. ஆனால் சபாநாயகர் கேள்வி நேரம் முடிந்ததும் பேசுங்கள் நேரம் தருகிறேன் என்றார். கேள்வி நேரத்தை ரத்து செய்து வி்ட்டு தான் விவாதிக்க வேண்டும் என தொடர் அமளியில் ஈடுபட்டதால் 2 நாட்கள் வெளியேற்றப்பட்டனர். 3வது நாளும் அமளி தொடர்ந்ததால் அதி்முகவினரை தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தங்களை சஸ்பெண்ட் செய்ததை கண்டித்தும், சிபிஐ விசாரணை கோரியும் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே அதி்முக உண்ணாவி்ரதம் இன்று காலை தொடங்கியது. எடப்பாடி தலைமையில் அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் கருப்பு சட்டையுடன் இதில் பங்கேற்று உள்ளனர்.
உண்ணாவிரதத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறு செய்யக்கூடாது என்பது உள்பட 23 நிபந்தனைகளுடன் போலீசார் உண்ணாவிரதத்திற்கு அனுமதி வழங்கினர். ஆனால் எம்.எல்.ஏக்கள் அல்லாத அதிமுகவினர் பொன்னையன் , வளர்மதி, உள்பட ஏராளமானோர் இஅதில் பங்கேற்று உள்ளனர்.