Skip to content
Home » திமுகவுக்கு தாவ தயாராக இருந்த 40 அதிமுக எம்.எல்.ஏக்கள்…. சபாநாயகர் பகீர் தகவல்

திமுகவுக்கு தாவ தயாராக இருந்த 40 அதிமுக எம்.எல்.ஏக்கள்…. சபாநாயகர் பகீர் தகவல்

  • by Authour

சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை ராஜரத்தினம் அரங்கத்தில்  ரா.குமார் எழுதிய “நடையில் நின்றுயர் நாயகன்” என்னும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. திமுக ஆட்சியின் சிறப்பை விளக்கி எழுதியுள்ள அப்புத்தகத்தை, சபாநாயகர் அப்பாவு தலைமையில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:

ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக கட்சி களேபரமானது. அப்போது எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சரான பிறகு, 18 எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்து அதிமுகவுக்கு கொடுத்த ஆதரவை  வாபஸ் வாங்கினர்.

அந்த சமயம் டிடிவி தினகரன் திகார் சிறைக்கு சென்றார். அப்போது எனக்கு ஒரு நண்பர் தொடர்புகொண்டு , 40 அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்து எங்கே செல்வது என தெரியாமல் இருந்து வருகின்றனர். அவர்களை திமுக பக்கம் வரவழைத்து நாம் ஆட்சியை கைப்பற்றலாம் என கூறினார். இந்த தகவலை நான் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலினிடம் கூறினேன். இந்த விஷயம் பற்றி சிறிது யோசித்து விட்டு, இந்த 40 அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நாம் ஆட்சியை பிடிக்க வேண்டாம். நாம் நேரடியாக மக்களிடம் செல்வோம். அவர்கள் வாய்ப்பளித்தால் ஆட்சி அமைப்போம் என கொள்கை பிடிப்போடு இருந்தவர் நமது முதல்வர்  மு.க.ஸ்டாலின். மேலும் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க மத்திய அரசு அதிகாரத்தை பயன்படுத்தி தலைவர்களை கொச்சைப்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *