அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறையால் தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஏழாவது முறையாக விசாரணைக்கு வந்துள்ள நிலையில் விஜயபாஸ்கரும் அவரது மனைவி ரம்யாவும் நேரில் ஆஜராகவில்லை. அவர்களுக்கு பதிலாக அவர்களது வழக்கறிஞர்கள் ஆஜராகி உள்ள நிலையில் கடந்த இரண்டு மூன்று வாய்தாவின் போது தொடர்ச்சியாக விஜயபாஸ்கர் தரப்பு வழக்கறிஞர்கள் லஞ்ச ஒழிப்புத் துறையால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை நகல் முழுமையாக தங்களுக்கு வழங்கப்படவில்லை அதனை முழுமையாக வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் தெரிவித்திருந்த நிலையில் விஜயபாஸ்கர் மீதும் அவரது மனைவி ரம்யா மீதும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த 17 ஆயிரம் பக்கங்கள் நீதிபதி முன்பு சமர்ப்பித்த நிலையில் இந்த வழக்கை வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த் உத்தரவு
Tags:அமைச்சர் விஜயபாஸ்கர்