Skip to content
Home » வரும் டிசம்பருக்குள் அதிமுக ஒன்றிணையும்….. வைத்திலிங்கம் சொல்கிறார்

வரும் டிசம்பருக்குள் அதிமுக ஒன்றிணையும்….. வைத்திலிங்கம் சொல்கிறார்

  • by Senthil

ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகியான  வைத்திலிங்கம் தஞ்சையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:

நாங்கள் எடப்பாடி பழனிச்சாமி  உள்ளிட்ட  யாரையும் இழக்க விரும்பவில்லை.  இந்த இயக்கம் ஒன்றாக வேண்டும் என்று நினைக்காதவர்கள் விரும்பாதவர்கள் அவர்களாக வெளியேறி விடுவார்கள். இது காலத்தின் கட்டாயம். அதாவது ஒற்றை தலைமை இரட்டைத்தலை என்பது இணையும்போது ஒரு முடிவு வரும்.

2025 டிசம்பருக்குள் ஒரு நல்ல முடிவு ஏற்படும். நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் செயல்பாடுகள், சட்டமன்ற தேர்தலில் அவர்களின் செயல்பாடுகள் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் எடப்பாடி பழனிசாமி இந்த இயக்கத்தை அழித்து விடுவார் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார் உண்மையும் அதுதான் .

2021- தேர்தலில் நாங்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று எவ்வாறு வற்புறுத்தினோம். அன்றைக்கு இல்லை இல்லை நாம் தனித்து நிற்போம். 150 இடத்திற்கு மேல் வந்துவிடலாம் என்று சொல்லி எல்லோரையும் எடப்பாடி பழனிச்சாமி ஏமாற்றினார். அதுபோல நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி வரும் 40 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பெற்று விடலாம் என்று கூறினார் .

ஆனால் 20 சதவீத வாக்குகள் வரும் அளவுக்கு மோசமான நிலைக்கு கொண்டு வந்து விட்டார் அதை நினைத்து அவர் கூறியுள்ளார். அதிமுகவை ஒருங்கிணைக்க சசிகலா சுற்றுப்பயணம் செல்கிறார் அவரையும், டிடிவி தினகரன் ,ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தொண்டனின் எண்ணம். டிசம்பருக்குள் நிச்சயம் ஒற்றுமை வரும். 2026 நிச்சயம் அதிமுக ஆட்சி தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!