சென்னையில் இன்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிட பார்வையாளர் சி. டி. ரவி ஆகியோர் அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார். பின்னர் சி.டி. ரவி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
திமுக அரசு பால்விலையை உயர்த்தி விட்டது. எனவே அந்த கட்சி கூட்டணியை ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் தோற்கடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து விட்டது. நாங்கள் அதிமுகவை ஒற்றுமைப்படுத்த முயற்சி செய்கிறோம். அதிமுக ஒன்றாக சேர்ந்தால் தான் திமுக வை தோற்கடிக்க முடியும். தமிழக நலனுக்காக எடப்பாடியும், ஓபிஎஸ்சும் இணைந்து பணியாற்றும்படி கூறினோம். தமிழக மக்கள் திமுக மீது அதிருப்தியில் உள்ளனர். பா.ஜ.கவின் நிலைப்பாடு குறித்து கருத்து கூற 7ம் தேதி வரை அவகாசம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து அண்ணாமலை கூறியதாவது: தமிழகத்திற்கு ஒரு உறுதியான அதிமுக தேவை. எனவே தான் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அண்ணாமலை ஆகியோரை சந்தித்து, தேசிய தலைவர் நட்டா கூறிய கருத்துக்களை சொன்னோம். அதிமுக ஒன்றாக செயல்பட வேண்டும் என்பது தான் பா.ஜ. நிலைப்பாடு. திமுகவை எதிர்க்க அதிமுக ஒன்றிணையவேண்டும் என்பதே எங்கள் கருத்து. நட்டா கூறிய இந்த கருத்தை நாங்கள் இருவரிடமும் வலியுறுத்தினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.