டங்ஸ்டன் தடுப்போம் மேலூரை காப்போம், என்ற வாசகங்கள் அடங்கிய முக கவசம் அணிந்தபடி அதிமுகவினர் இன்று சட்டமன்றத்துக்கு வந்தனர். இதற்கு பதிலளித்து நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் பேசியதாவது:
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி வழங்க மாட்டோம். முதல்வர் ஸ்டாலின் இருக்கும்வரை ஒரு பிடி மண்ணைக்கூட எடுக்க முடியாது. அதிமுக செய்த தவறை மறைக்க அதிமுகவினர் முக கவசம் அணிந்து வந்து உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்: அதிமுக எம்.பி. தம்பிதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஆதரவாக மாநிலங்களவையில் பேசியதால் தான் இந்த பிரச்சனை வந்தது.