கரூரை சேர்ந்தவர் வடிவேல், 70 கே.ஆர்.வி., என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். அதில், அறை எண் 100 ல் செயல்பட்டு வரும் ஆப்பிள் ஸ்பாவில் (மஜாஜ் சென்டர்) விபச்சாரம் நடப்பதாக, கரூர் ஆத்தூர் ஜே.கே. நகர் பகுதியை சேர்ந்த குமார், (36) என்பவர் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, கரூர் நகர போலீசார் கே.ஆர்.வி., ஓட்டலில் அறை எண், 100ல் சோதனை நடத்திய போது, இரண்டு பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியது தெரியவந்தது. பிறகு, ஆப்பிள் ஸ்பாவை நடத்தி வந்த, கரூர் புலியூர் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி (56), அவரது மகன் அரவிந்த் (27), கோவையை சேர்ந்த புரோக்கர் ராஜிவ் (28) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில், வேலுச்சாமி, ராஜிவ் ஆசியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள, அரவிந்த்தை கரூர் நகர போலீசார் தேடி வருகின்றனர்.
அதிமுக மாஜி எம்எல்ஏவுக்கு சொந்தமான ஓட்டலில் விபச்சாரம்…..2 பேர் கைது…3 பேர் மீது வழக்கு..
- by Authour
