அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 9ம் தேதி காலை சென்னை கட்சி அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தான் அதிமுக நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் திடீரென மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசி முடிவெடுப்பதற்காக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஒரு தரப்பினரும், முக்கியமான முடிவினை எடப்பாடி அறிவிப்பார் என்றும் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு திடீரென 9ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்ட அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதிமுகவில் ஏதோ பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பதையே இந்த அறிவிப்பு காட்டுகிறது என அரசியல் வட்டாரத்தில் பரபரப்புடன் பேசப்படுகிறது.
