அதிமுகவில் எடப்பாடி, ஓபிஎஸ் என இரட்டை தலைமை செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தனக்கு தான் கட்சியில் அதிக பொதுக்குழு உறுப்பினர்க்ள, எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் ஆதரவு உள்ளது. தான் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளேன். எனவே இரட்டை இலை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார்.
இதை ஏற்று தேர்தல் ஆணையம் இன்று எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்தது. இதனால் அவருக்கே இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது. எடப்பாடி அதிமுக பொதுச்செயலாளர் என்பதை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்து உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு ஓபிஎஸ் அணியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.