Skip to content
Home » பாஜக கூட்டணி இல்லை…. எடப்பாடி அறிவிப்புக்கு பொதுக்குழு அமோக வரவேற்பு

பாஜக கூட்டணி இல்லை…. எடப்பாடி அறிவிப்புக்கு பொதுக்குழு அமோக வரவேற்பு

  • by Authour

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை  அடுத்த வானகரத்தில் நடந்தது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் பேசும்போது, சிறுபான்மை மக்களை  பற்றி  எதிர்க்கட்சி தலைவருக்கு எப்படி திடீர்  பாசம் வந்தது என்கிறார் ஸ்டாலின்.   அதிமுக, பாஜகவில் இருந்து விலகியதும் முதல்வருக்கு  தூக்கம் போச்சு., சிறுபான்மை மக்களின் வாக்கு சிதறி விடும் என்ற பயம் வந்து விட்டது. . பாஜக கூட்டணி இல்லை என்பதை நாங்கள் தெளிவு படுத்தி விட்டோம். (கரகோஷம்) எந்த தேசிய கட்சியையும் நம்பி நாங்கள் இல்லை.

ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு இது. அதன்படி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை  ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம்.  விழித்துகொண்டோர் எல்லாம் பிழைத்துக்கொண்டார்கள் என புரட்சி தலைவர் பாடினார். இப்போது சிறுபான்மை மக்கள் விழித்து கொண்டார்கள்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். பாஜகவுடன் அதிமுகவுக்கு கூட்டணி இல்லை என்று  எடப்பாடி அறிவித்தவுடன், பொதுக்குழுவில் கரகோஷம் விண்ணைப்பிளந்தது.  சில உறுப்பினர்கள் எழுந்து நடனமாடி மகிழ்ச்சியை  வெளிப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *