அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வரும் 26ம் தேதி காலை 10.35 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள சிரிவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடக்கிறது. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை தாங்குகிறார். இதில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
