முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கான தீர்மானம் பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையிலும் அவர் தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொண்டதுடன், அதி்முக வேட்டி, காரில் அதிமுக கொடியுடன் வலம் வந்தார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஓ. பன்னீர்செல்வம் அதிமுக கொடி, வேட்டி ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.
இந்த வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், அதிமுக கொடி, லட்டர் பேட், சின்னம் ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தக்கூடாது என்ற இடைக்கால உத்தரவை உறுதி செய்து இன்று இறுதி தீர்ப்பு வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டது.