அதிமுக செயற்குழு கூட்டம் வரும் மே 2ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்குகிறார். இந்த தகவலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
அதிமுக திடீரென பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து உள்ளது. இந்த கூட்டணிக்கு கட்சி நிர்வாகிகள் பெரும்பாலோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனை சரி செய்யும் வகையில் இந்த கூட்டத்தை எடப்பாடி கூட்டி உள்ளதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.