அதிமுக நிர்வாகிகள் மீது திமுக மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் மதனா தலைமையில் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது..
திராவிட முன்னேற்ற கழக திருச்சி மத்திய மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் மதனா தலைமையில் இன்று திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமனியிடம் புகார் மனு ஒன்று அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 20-ம் தேதி மதுரையில் நடந்த அதிமுகவின் மாநாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு க ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஆகியோரை ஆபாசமாகவும் அவதூறாகவும், அநாகரிகமாக மேடையில் பாட்டுப் பாடிய நபர் மற்றும் இந்த செயலை கைதட்டி ரசித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி மத்திய மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் மதனா தலைமையில் திமுக மகளிர் தொண்டர் அணியினர் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினியிடம் புகார் மனு அளித்தனர்.