Skip to content

மாணவி பலாத்காரம்: கிருஷ்ணகிரியில் 8ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம்  பர்கூர்  ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள   ஒரு பள்ளியில் 8ம்  வகுப்பு படித்து வந்த மாணவி ஆசிரியர்களால்  பலாத்காரம் செய்யப்பட்டதில் கர்ப்பமடைந்தார்.  இது தொடர்பாக அதே பள்ளியை சேர்ந்த  ஆசிரியர்கள் ஆறுமுகம்( 48), சின்னசாமி( 57) பிரகாஷ்(37) ஆகியோர் கைது செய்யப்பட்டு  சேலம் சிறையில் அடைக்கப்பட்டு  உள்ளனர்.

இந்த சம்பவத்தை கண்டித்தும்,  பெண்களுக்கு உ ரிய பாதுகாப்பு அளிக்க கோரியும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும்   அதிமுக சார்பில் வரும் 8ம் தேதி காலை 10 மணிக்கு  கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம்  நடத்தப்படும் என  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில்  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அதிமுகவினர் அனைவரும் கலந்து கொள்ளும்படியும் அவர் கேட்டுக்கொண்டு்ளார்.

error: Content is protected !!