போதை பொருள் கடத்தலில் திமுக பிரமுகருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதையொட்டி அவரை கட்சியில் இருந்து திமுக டிஸ்மிஸ் செய்தது. இந்த நிலையில் திமுக அரசை கண்டித்து அதிமுக இளஞரணி, இளம்பெண்கள் பாசறை சார்பி்ல் வரும் 4ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
