தமிழகத்தில் வரும் 1ம் தேதி முதல் மின்கட்டணம் உயர்கிறது. இதைக்கண்டித்து தலைநகரங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் கண்டண ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருந்தார்.
அதன்படி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அம்மா மக்கள் முன்னனேற்றக்கழக ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. தலைமை நிலையசெயலாளர் ராஜசேகரன், தெற்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துக்கொண்டு தமிழக மக்களின் மீது மின்கட்டணம், சொத்துவரி, பால், அத்தியாவசிய பொருட்கள், சாலைவரி உள்ளிட்டவைகளை உயர்த்திய திமுக அரசைக் கண்டித்து பதாகைகளை ஏந்தியபடி கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.