பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்து அதிமுக சார்பில் வரும் ஜனவரி 2ம் தேதி திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். விவசாயிகளிடம் இருந்து கரும்பை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கவும் வலியுறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலையில் அண்ணாசிலை அருகில் 2ம் தேதி காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.