பெரம்பலூரில் அதிமுக நகர கழகத்தின் சார்பில், சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் ராஜ பூபதி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதில் முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம்,முன்னாள் எம்.எல்.ஏ க்கள்,எம்.பி, நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.